Header Ads



உயிருடன் மீட்கப்பட்ட 2 சிறுத்தை குட்டிகள் தாயிடம் ஒப்படைப்பு (படங்கள் இணைப்பு)


(க.கிஷாந்தன்)

அட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு சிறுத்தைப்புலி குட்டிகளை தனது தாய் சிறுத்தைப்புலியிடமே வனவிலங்கு அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.


பிறந்து பத்து நாட்களே ஆன, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ஆண் மற்றும் பெண் சிறுத்தைக் குட்டிகள் இரண்டு இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் தேயிலை மலையில் அடிப்பகுதியில் இருப்பதை அப்பகுதியில் வேலை செய்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கண்டுள்ளனர்.


இதனையடுத்து, தொழிலாளர்கள், தோட்ட அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.


தோட்ட அதிகாரி உடனடியாக நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் வழங்கியுள்ளார்.


பின்னர் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிறுத்தைப்புலி குட்டிகளை பாதுகாப்பாக மீட்டு தாய்புலியிடம் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.


அதன் பின்னர் தாய் சிறுத்தைப்புலி சுற்றித் திரிவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அதனையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தாய் சிறுத்தைப்புலி வந்து முதலில் ஆண் சிறுத்தைப் புலிக்குட்டியை எடுத்துச் சென்றதாகவும், சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு பெண் சிறுத்தைப் புலிக்குட்டி வனப்பகுதிக்குச் எடுத்து சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.





No comments

Powered by Blogger.