15,000 வீடுகளுக்கு ஆபத்து
நாடளாவிய ரீதியில் 15,000 வீடுகள் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த 15,000 வீடுகளில் வசிக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நீண்ட கால வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மண்சரிவு ஆய்வுகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதுவரை 3,500 க்கு அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment