Header Ads



15 வயது மணமகளும், 19 வயது மணமகனும் கைது


சௌருபுர பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றில் இன்று -09- அங்குலான பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது திருமண சம்பிரதாய உடையுடன் வயது குறைந்த தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் போதே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட மணப்பெண்ணுக்கு 15 வயது , மணமகனுக்கு 19 வயது . இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் காதலுக்கு சிறுமியின் பெரிய தந்தை எதிர்ப்புத் தெரிவித்ததால் , சிறுமி காதலனுடன் தப்பிச் சென்று மகொன பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளதாகவும் இதையடுத்து உறவினர்கள் தலையிட்டு திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது .


மண்டபத்திற்குள் பொலிஸார் சென்றபோது, ​​தம்பதிகள் அங்கிருந்த விருந்தினர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இளைஞனை மொரட்டுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.