Header Ads



குவைத்தில் இலங்கையரினால் மீட்கப்பட்ட 'ரொஸ்கோ' - கடும் போராட்டத்துடன் 13 இலட்சம் செலவழித்து நாட்டை வந்தடைந்தது


குவைட் நாட்டில் பிறந்த நாயொன்றை கடும் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையரொருவர் இலங்கைக்கு கொண்டு வந்த நெகிழ்ச்சி சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


குவைட் நாட்டில் வீதியோரத்தில் இருந்த நாயொன்றை குவைட்டில் வசிக்கும் இலங்கை தம்பதிகளாக தச்ஷி – பாலகும்புர ஆகியோர் எடுத்துச்சென்று ‘ரொஸ்கோ” என பெயர் வைத்து தமது தொடர்மாடி குடியிருப்பில் வைத்து வளர்த்து வந்துள்ளனர்.


குவைட் நாட்டின் பிரஜைகளுக்கு விரும்பியவாறு மிருகங்களை வளர்க்க முடியும் என்பதுடன், அந்த நாட்டு பிரஜை இல்லாத ஒருவருக்கு மிருகங்களை வளர்க்க முடியாது என்பதே அந்த நாட்டின் சட்டமாக காணப்படுகின்றது.


எனினும், குவைட் நாட்டின் சட்டம் தொடர்பில் அறியாத தம்பதியினர் மிகுந்த பாசத்துடன் வீட்டினுள் பாதுகாப்பாக வைத்து வளர்த்து வந்துள்ளனர்.


இந்த நிலையில், ”ரொஸ்கோ” குரைக்க ஆரம்பித்த நிலையில், தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் ஏனையோர், இது தொடர்பில் தொடர்மாடி குடியிருப்பு உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர்.


இதையடுத்து, தொடர்மாடி குடியிருப்பின் உரிமையாளர், ”ரொஸ்கோ”வை 20 நாட்களில் அழைத்து செல்லுமாறும், இல்லையென்றால், தாம் அதனை அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார்.


இதன் காரணமாக ”எமது குழந்தையை காப்பாற்றி தருமாறு” அதன் உரிமையாளர் முகப்புத்தகம் ஊடாக பதிவொன்றையிட்டு உதவிகோரியுள்ளார்.


இதன்போது அந்த பதிவை அவதானித்த இலங்கை பெண்ணான கலாநிதி விஷாகா சூரியபண்டார, இது தொடர்பில் உரிமையாளருடன் கலந்துரையாடியுள்ளார்.


இதனை தொடர்ந்து, சுமார் 13 இலட்சம் ரூபாவிற்கும் அதிக தொகையை செலவிட்டு, ”ரொஸ்கோ”வை நாட்டிற்கு கொண்டு வர கலாநிதி விஷாகா சூரியபண்டார நடவடிக்கை எடுத்துள்ளார்.


”ரொஸ்கோ”வை நாட்டிற்கு கொண்டு வர 100 ரூபா முதல் பண உதவிகளை வழங்கி உதவி புரிந்ததாகவும், இவ்வாறு அழைத்து வராமல் இருந்திருந்தால், அந்த நாட்டு பிரஜைகள் ”ரொஸ்கோ”வை கொலை செய்திருப்பார்கள் எனவும் உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், குவைட் விமானம் மூலம் ரொஸ்கோ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று வந்தடைந்த நிலையில், தமது உரிமையாளரிடம் தொலைபேசி ஊடாக காணொளியில் பேச வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.