Header Ads



"மைத்திரிக்கு எதிராக 10 வாரங்களுக்கு, எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்"


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் எதிர்வரும் 10 வாரங்களுக்கு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதிருக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை, இன்று (14) சோபித ராஜகருணா, தம்மிக கணேபொல ஆகிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது..


குறித்த விடயம் தொடர்பில் தனக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணையை இடைநிறுத்தும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள ரிட் மனுவே இவ்வாறு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


அதற்கமைய, மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு விசாரணை நிறைவடையும் வரை, அவருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. නඩුත් හාමුදුරුවන්ගේ බඩුත් හාමුදුරුවන්ගේ.

    ReplyDelete

Powered by Blogger.