Header Ads



படு­கொலை செய்­யப்­பட்ட 100 முஸ்லிம்களின் உடல்­களை தோண்டி எடுத்து, இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்ய அனு­ம­தி­க்குமாறு கோரிக்கை


1990 ஆம் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் குருக்கள் மடத்தில் வைத்து கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்டு அங்கு புதைக்­கப்­பட்­டுள்ள 100க்கு மேற்­பட்ட முஸ்லிம்களின் உடல்­களை தோண்டி எடுத்து இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்ய அனு­ம­தி­ய­ளிக்க வேண்டும். அதற்­கான சிபா­ரி­சினை வலிந்து காணா­ம­லக்­கப்­பட்டோர் மற்றும் கடத்­தப்­பட்டோர் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு மேற்கொள்ள வேண்டும் என காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன் கோரிக்­கை முன் வைத்­துள்­ளது.


வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்டோர் மற்றும் கடத்­தப்­பட்டோர் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காத்­தான்­குடி ஹோட்டல் பீச்வே மண்­ட­பத்தில் சாட்­சி­யங்­களை பதிவு செய்­தது. இதன்­போது, காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனத் தலைவர் ரஊப் ஏ மஜீத் இந்த கோரிக்­கையை முன் வைத்தார்.


சாட்­சி­யங்கள் பதிவு செய்­யப்­பட்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த அவர், 1990 ஆம் ஆண்டு செப்­டம்பர் 17 ஆம் திகதி குருக்கள் மடத்தில் வைத்து கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட 100க்கு மேற்­பட்ட எமது சகோ­த­ரர்­க­ளுக்கு நீதியும் நியா­யமும் வேண்டும். அதில் புனித ஹஜ் கட­மையை முடித்து வந்­த­வர்கள், அங்­காடி வியா­பா­ரிகள் என பலர் அடங்­கு­கின்­றனர்.


இங்கு கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட எமது சகோ­த­ரர்­களை இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்­ய­வேண்டும். அதற்­கான சிபா­ரிசை வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்டோர் மற்றும் கடத்­தப்­பட்டோர் தொடர்­பான விசா­ர­ணை­களை ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்னெடுக்க வேண்டும். அத்­தோடு முஸ்லிம்களும் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்டு கடத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்ளனர் என்­பதை சர்­வ­தேச சமூ­கத்­துக்கு தெரி­யப்­ப­டுத்தி இதற்­கான நீதி நியா­யமும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என தெரி­வித்தார்.


இங்கு கருத்து தெரி­வித்த காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளன செய­லாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் (நளீமி), யுத்தம் நில­விய காலத்தில் காத்­தான்­கு­டியை மையப்­ப­டுத்தி நான்கு பாரிய சம்­ப­வங்கள் இடம் பெற்­றுள்­ளன.


அதில் குருக்கள் மடத்தில் இடம் பெற்ற கடத்தல் படு­கொ­லையும் பள்­ளி­வா­யல்­களில் இடம் பெற்ற துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வங்­களும் காணி­களை இழந்­தி­ருக்­கின்ற நிலை­மையும் அயல் கிரா­மங்­களில் இருந்து காத்­தான்­கு­டிக்கு இடம் பெயர்ந்த நிலையில் அவர்­களின் இழப்­பீ­டுகள் போன்ற நான்கு விட­யங்­களை மையப்­ப­டுத்­தி­ய­தான மகஜர் ஒன்­றினை ஆணைக்­கு­ழு­விடம் கைய­ளித்­துள்ளோம்.


இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களை விசா­ரணை செய்ய சுயா­தீன ஆணைக்­கு­ழு­வொன்று அமைக்­கப்­படல் வேண்டும். இழப்­புக்­க­ளினால் கடும் துன்­பங்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருக்கும் குடும்­பங்­க­ளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்­கப்­படல் வேண்டும். முஸ்­லிம்கள் இழந்த காணி­களை பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்கொள்ள வேண்டும். மீள்குடியேறியுள்ள மக்களுக்கான வீட்டுத்திட்டம் வாழ்வாதாரம் வழங்குவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நாம் ஆணைக்குழு முன்னிலையில் முன் வைத்துள்ளோம். பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும் என நம்புகின்றோம் என தெரிவித்தார். 


-Vidivelli

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)


No comments

Powered by Blogger.