Header Ads



சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட இம்ரான் Mp யின் வீடு - 15 வருட சட்டரீதியான போராட்டதின் பின் நீதி கிடைத்தது


எமது கிண்ணியா மாஞ்சோலை வீட்டு  வழக்கு நிறைவடைந்து வீடு எமக்கு கிடைத்தது.  அல்ஹம்துலில்லாஹ்.


எமது தந்தை மர்ஹூம் M.E.H.  மகரூப் அவர்கள் வாழ்ந்து, தனது அரசியல் செயற்பாடுகளுக்கு பாரிய பங்களிப்பு செய்த கிண்ணியா மாஞ்சோலை வீட்டை  2005ஆம் ஆண்டு முதல்  சிலர் சட்டவிரோதமாக  கைப்பற்றி குடியிருந்தனர். 


அவ்வீட்டை சட்ட ரீதியாக பெற வேண்டும் என்பதற்காக வழக்கு தாக்கல் செய்து 15 வருட சட்டரீதியான போராட்டதின் பின்னர் வழக்கு எமக்கு சார்பாக தீர்ந்தது. 


எதிர்த்தரப்பினரின் மேன்முறையீடு காரணமாக சிறிது கால தாமதத்தின் பின்னர் மேன்முறையீட்டிலும் எமக்கு சார்பாக தீர்ப்பு கிடைத்தது. 


தீர்ப்பின் பிரதிகள் இன்று -22- நீதிமன்றத்தால் பிரதிவாதிக்கு உத்தியோகபூர்வமாக வழங்குவதற்கு குறிப்பிட்ட இடத்திற்கு நீதிமன்ற மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சென்றபொழுது வீட்டில் பிரதிவாதி இருக்காமையால் அவரின் மனைவியிடம் தீர்ப்பின் பிரதி கையளிக்கப்பட்டு இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் அவ்விடத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று நீதிமன்ற  அறிவித்தல் கையளிக்கப்பட்டது. 


இதன் படி எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும். 


இவ்வழக்கு விடயத்தில் எமக்காக முன்னிலையான சட்டத்தரணி சபருள்ளா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோருக்கு இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

 

அல்ஹம்துலில்லாஹ், ஜஷாகுமுல்லா ஹைரான்…


Imran Maharoof Mp

No comments

Powered by Blogger.