கரைவலை தோணிகளுக்கு பிடிக்கப்பட்ட அதிகளவான கீரி மீன்கள்
(எம்.என்.எம்.அப்ராஸ்)
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள கடற்பரப்பில் கரைவலை தோணிகளுக்கு நீண்ட நாட்களின் பின்னர் அதிகளவான கீரி வகை மீன்கள் இன்றைய தினம்(12)பிடிக்கப்பட்டது.
கடந்த நாட்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இப் பகுதியில் கரைவலை மீன்பிடியானது மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்ட நிலையில் இன்று(12) கரைவலை மீனவர்களுக்கு கீரிவகை மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டது இதனால் கரைவலை மீனவர்கள் மகிழ்ச்சி நிலையில் காணப்பட்டனர்.
குறித்த கீரி வகை மீன்கள் உள்ளூர் சந்தையில் இன்று (12) அதிகாலை நேரம் ஒரு கிலோ 800/- ரூபாய்க்கு
விற்பனையான நிலையில் மதிய நேரத்தில் 600/-ரூபாயிக்கு விற்பனையானதை அவதானிக்க முடிந்தது.
மேலும் மீன்கள் அதிகமாக பிடிக்கப்படுமானால் இன்னும் மீன்களின் விலை குறைவடைக் கூடிய சாத்திய நிலை உள்ளது.
இதேவேளை மேலதிக மீனகள் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக குளிரூட்டப்பட்ட வாகனம் மூலம்
அனுப்பிவைக்கப்படுகின்ற இதேவேளை இப் பிரதேசத்தில் மீன்கள் கருவாட்டுக்காய் பதனிடப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது .
அண்மைய நாட்களில் கரைவலை மீன்பிடி குறைவானதாக காணப்பட்ட நிலையில் கரைவலை மீன்கள் ஒரு கிலோ1000/- ரூபாவிக்கு மேல் உள்ளூர்சந்தையில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment