என்னை பிரதமராக்கிவிட்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம், அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்ட எதிர்பார்த்தார்கள்
மக்கள் போராட்டத்தால் இராஜினாமா செய்ய வேண்டி ஏற்பட்ட ஜனாதிபதி - பிரதமர்-நிதி அமைச்சர்களுக்குப் பதிலாக, தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் ஒருவரையே நாட்டின் தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டிய தேவை அன்று அவர்களுக்கு ஏற்பட்டதாகவும்,அன்று தன்னை பிரதமர் பதவிக்கு அழைத்து, சில நாட்களுக்குப் பிறகு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து தனது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுக்கு கட்டுவதையே அவர்கள் எதிர்பார்த்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இதனைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அரசியலில் அனுபவம் இல்லாதவர் அல்ல எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதுபோன்ற ஏமாற்று வித்தைகளை நம்பி ஏமாற மாட்டேன் எனவும் தெரிவித்தார்.
அரசாங்கம் தொடர்ந்து செயற்பட முடியாது என்பதை நிரூபித்துள்ளதாகவும்,இவ்வாறான அரசாங்கத்திடம் தாம் ஒன்றே ஒன்றையே கோருவதாகவும்,அது தேர்தலைத் தவிர வேறொன்று இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
திஸ்ஸமஹாராம பெரலிஹெலவில் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (30) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குடிமக்களின் போராட்டம் காரணமாக முன்னாள் நிதியமைச்சர்,பிரதமர் மற்றும் ஜனாதிபதி முறையே வீட்டுக்குச் சென்றதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,சூட்சுமமாக மொட்டுத் தலைவர்களால் தங்களுக்கு நட்பாக இருக்கும் தற்போதைய ஜனாதிபதியை நியமித்துக்கொண்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment