தங்க பிஸ்கட், இரத்தினக் கற்களை கடத்திச் செல்ல முற்பட்ட இருவர் விமான நிலையத்தில் கைது
- Ismathul Rahuman -
சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை எடுத்துச் செல்ல முற்பட்ட அமெரிக்கப் பிரஜை ஒருவரையும், இரத்தினக் கற்களை எடுத்துச் செல்ல எத்தனித்த இலங்கைப் பெண் ஒருவரையும் சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
EK 651 இலக்க விமானத்தில் 3ம் திகதி பயணிக்க வந்த அமெரிக்க பிரஜையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அவரின் கைப்பையை பரிசோதித்த போது சூசகமான முறையில் மறைத்து வைத்திருந்த தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
6.75 மில்லியன் ரூபா பெறுமதியான 300 கிராம் எடைகொண்ட தங்க பிஸ்கட்டுகளே கைபற்றப்பட்டன.
கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இரத்தினக் கற்களுடன் கைதுசெய்யப்பட்டார். இவர் UL 121 இலக்க விமானத்தில் செல்ல வந்தபோது அவரின் பயணப்பையில் இருந்த சட்டவிரோதமாக கடத்திச் செல்வதற்கு எடுத்துவந்த சிறிய இரத்தினக்கற்கள் கைபற்றப்பட்டன. இதன் பெறுமதி 3 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தான் பத்திரிகையும் சுங்கத் திணைக்களமும் செய்யும் கபட நாடகம். இது பெறுமதி குறைந்த சாதாரண மக்கள் பாவிக்கும் கெவுட,அபதிஸ் வகைக்கற்கள். இவை அத்தனையையும் கொண்டு சென்று வௌிநாட்டில் விற்பனை செய்தாலும் 500 டொலராவது அதன் உரிமையாளருக்குச் சம்பாதிக்க முடியாது. எனவே பொய் சோபன கபடி நாடகம் ஆடாமல் சொந்தக்காரருக்கு ஐநூறு ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய் தெண்டப்பணம் செலுத்து இந்த கற்களை திருப்பிக் கொடுத்தால் நாட்டுக்கும் எல்லோருக்கும் நல்லது.
ReplyDelete