விருது பெற்றார்
தன் தாய் நாட்டின் சுபீட்சம், இன தேச பாதுகாப்பு தொடர்பாக, உண்மையுடனும் பொது நலத்துடனும் சுய நற்பழக்கககங்களுடனும், நல்லெண்ணத்துடனும் நீதி, நியாயத்தினைப் பாதுகாப்பதில் தன் பொறுப்பை அர்ப்பணிப்புடன், எல்லையின்றி ஆற்றியமை, தன் கலாச்சார விழுமியங்களைப் பேணியதுடன் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றின் நிலைத்தலுக்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு ஆற்றிய சகலவித சேவைகளையும் கௌரவிக்கும் வகையில் அகில இலங்கை கலாச்சார ஒத்துழைப்பு மன்றத்தின் ஆண்டு விழா நிகழ்வில் தாகா அகமட் இம்தியாஸ் அவர்களுக்கு தேசமான்ய மற்றும் தேசகீர்த்தி தேசிய கௌரவ நாம விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.
அநுராதபுர மாவட்ட ஹெரொவ்பொத்தான பிரேதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தராகப் பணியாற்றுவதுடன்,அரசகரும மொழிகள் திணைக்களத்தின்மொழிபெயர்ப்பில் டிப்ளோமா பாடநெறியை அகில இலங்கை ரீதியில் முதல்மதிப்பெண் பெற்று பூர்த்தி செய்ததுடன். அத்திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளராகவும் மொழிப் பயிற்றுனருமாக செயற்படும் இவர் ஓர் சமாதான நீதவான் என்பதுடன் ஓர் சமூக ஆர்வலருமாவார்.
பிரதேசத்திலும் மாவட்டத்திலும் பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளை ஆற்றிய இவர் அநுராதபுரம் சாஹிராக்கல்லூரி, மடவளை மதீனா தேசியப் பாடசாலை திருகோணமலை கோணேஷ்வரா இந்துக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவருமாவார்
இவர் சிங்களமொழியை சுயமாகக் கற்று, இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தில் சிங்கள மொழி மூலத்திலேயே "ஊடகம் மற்றும் வெகுஜன தொடர்பாடல்" பாடத்தின் கற்கைப் பட்டதாரியுமாவார்.
Post a Comment