இறுதிவரை போராடி தோற்றது ஆப்கானிஸ்தான் - தோல்வியைத் தாங்கமுடியாது வீரர்கள் கண்ணீர் விட்டு அழுகை
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
19.2 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 131 ரன்கள் சேர்த்தது.
இதனால், ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றது. பாகிஸ்தான் தகுதிபெற்றதை தொடர்ந்து இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான், இந்தியா அணிகள் இழந்தன.
Post a Comment