அரசியல் சுனாமி ஏற்பட அதிக வாய்ப்பு, கோட்டபயவின் கதியே ரணிலுக்கும் ஏற்படும் - ஹிருணி
இந்தாண்டு ஒக்டோபர் மாத இறுதிக்குள் அரசியல் சுனாமி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது, அதில் அனைத்து ஊழல் அரசியல்வாதிகளும் அழிக்கப்படுவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய பெண்கள் சக்தி தலைவருமான ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று தெரிவித்துள்ளார்.
“இந்தக் கருத்தைச் சொன்னதற்காக நான் சிஐடியால் விசாரணைக்கு அழைக்கப்படலாம், ஆனால் இந்த புரட்சி நிச்சயமாக அக்டோபர் இறுதியில் நடக்கும். அரசியல் சுனாமி தாக்கும் போது தமக்கு முன்பிருந்த ஜனாதிபதிக்கு ஏற்பட்ட கதியே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த எழுச்சி எப்போது நடக்கும் என்று கேட்டதற்கு, யாரும் முன் எச்சரிக்கையுடன் செய்வதில்லை. கடந்த அரகலயவின் போது முக்கிய பங்காற்றிய பெண்களே இம்முறையும் தலைமை தாங்குவார்கள் என்பது நினைவிருக்கட்டும்.
தற்போதைய ஜனாதிபதி ஆட்சியமைக்கப்போகும் நாட்கள் எண்ணப்படுகின்றன.
“நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த முறை தெருவில் இறங்கினர், ஆனால் இந்த முறை ஏழைகள்தான் எழுச்சியை வழிநடத்துவார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment