Header Ads



பாராளுமன்றத்தில் செங்கோல் வரும்போது எழுந்து நிற்காத தேரர், சீன உளவுக் கப்பல் வரும்போது எழுந்து மரியாதை செய்கிறார்


இந்தியா எமக்கு உதவிக் கப்பல்களை அனுப்புவதாகவும், ஆனால் சீனா உளவுக் கப்பலை அனுப்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றில் தற்போது இடம்பெற்றுவரும் இடைக்கால வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.


இந்த காலகட்டத்திலே எங்களுக்கு உதவிய நாடு, அயல் நாடு இந்தியா மாத்திரமே. இந்தியா கடந்த பொருளாதார நெருக்கடியிலே 4 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. குறைந்த வட்டியில் 800 மில்லியன் உணவுக்காவும், மருந்துக்காகவும், அத்தியாவசிய தேவைகளுக்கும் வழங்கியுள்ளது. கடன் அடிப்படையில் 700 மில்லியன் எரிபொருளுக்கு வழங்கியிருக்கிறது. விவசாய உரத்திற்கு 55 மில்லியன் உதவி செய்திருக்கிறது. மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் அதற்கு மேலாக தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக உணவு பால்மா மருந்துப் பொருட்கள் இங்கு கிடைத்திருக்கின்றது. இந்தியா இந்த காலக்கட்டங்களிலே எங்களுக்கு உதவிக் கப்பல்களை அனுப்புகிறது. கடனை கூட மறுசீரமைக்க முடியாது என கூறும் சீனா இந்த நாட்டுக்கு உளவுக் கப்பலை அனுப்புகிறது. ஒரு விடயத்தை மிகவும் வேதனையுடன் கூறிக்கொள்ள விளைகின்றேன். இந்த பாராளுமன்றத்தில் செங்கோல் வரும் போது எழுந்து நிற்காத தேரர், சீனாவில் இருந்து உளவுக் கப்பல் வரும் போது அதற்குரிய மரியாதையை கொடுத்து எழுந்து நிற்கிறார். என்றார்.

No comments

Powered by Blogger.