Header Ads



டுபாயில் திட்டம் - பணத்திற்காக விகாராதிபதியை கொன்ற இளம்பிக்குவும், அவரது காதலியின் பெற்றோர்களும்


சீதுவை – வேத்தேவ பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி கொல்லப்பட்ட சம்பவம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து விகாரையில் இருந்து தப்பிச் சென்ற பிக்கு ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளர்.


இதன்படி, தலைமை விகாராதிபதியை கொலை செய்து விட்டு அவரது இரண்டு வாகனங்களையும் இரண்டு கோடி ரூபாவுக்கு விற்றுவிட்டு துபாயில் உள்ள எனது காதலியிடம் செல்ல திட்டமிட்டிருந்தேன் என அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


விகாராதிபதி கொலையின் பிரதான சந்தேக நபரான 19 வயதான பிக்கு நேற்று (15) பொலிஸாரின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.


இரண்டு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள்

தேரரின் கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய சந்தேகநபரின் துபாயை சேர்ந்த காதலியின் தாயும் தந்தையும் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


கொலையின் பின்னர் பெறப்பட்ட டிபெண்டர் ஜீப் மற்றும் வேகன்ஆர் ரக கார் 2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று சீதுவ பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


இந்தக் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 19 வயதுடைய சிவரதாரிய ஏகல சுமணசிறி என்பவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று அதிகாலை 1.00 மணியளவில் சீதுவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தனுஷ்க பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



சந்தேகநபரின் 19வது பிறந்தநாள் நேற்று என்றும் பொலிஸார் தெரிவித்தனர். விசாரணையின் படி, 19 வயதான சந்தேகநபர் அவரது துபாய் காதலி மற்றும் அவரது பெற்றோருடன் சேரந்து விகாராதிபதியை கொலை செய்து விட்டு விகாராதிபதியுடைய கோடிக்கணக்கான பணம் மற்றும் பெறுமதியான வாகனங்களை எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.


வாகனங்களையும்  தருமாறு விகாராதிபதியுடன் தகராறு

விகாராதிபதிக்கு சொந்தமான இரண்டு வாகனங்களையும் தமக்கு தருமாறு கோரி சந்தேகநபர் விகாராதிபதியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்த முரண்பாடுகள் தொடர்பில் சீதுவ பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


இந்த இரண்டு வாகனங்களையும் வழங்காத விகாராதிபதியை கொலை செய்ய இந்த குழுவினர் திட்டமிட்டுள்ளனர். துபாயில் உள்ள சந்தேகநபரின் காதலி, இந்நாட்டு இஸ்லாமியர் ஒருவர் மூலமாக துபாய்க்கு அனுப்பப்பட்டதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.



இந்த கொலையில் அந்த இஸ்லாமிய நபருக்கு தொடர்பு உள்ளதா என பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.


இதற்கிடையில், 19 வயதான சந்தேகநபர் விகாராதிபதியை கொலை செய்துவிட்டு சொத்துக்களை விற்று, துபாயில் உள்ள தனது காதலியிடம் செல்ல திட்டமிட்டார், அதற்காக அவர் ஏற்கனவே விசா மற்றும் விமான டிக்கெட்டுகளைப் பெற்றார்.


சந்தேகநபர் துபாய் செல்வதற்கு விசா பெற்றுக் கொடுப்பதற்கும், விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கும் துபாயில் உள்ள அவரது காதலி உதவியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. விகாராதிபதியை கொல்வதற்காக கடந்த 12ம் திகதி மதியம் சந்தேகநபரின் காதலியின் தாயும் தந்தையும் விகாரைக்கு வந்துள்ளனர்.


விகாராதிபதி கழுத்தை நெரித்து கொலை

இதன் போது மூவரும் இணைந்து விகாராதிபதியை தாக்கியுள்ளனர். பின்னர் சந்தேகநபரின் காதலியின் தாயும் தந்தையும் விகாராதிபதியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


விகாராதிபதியை கொலை செய்ததன் பின்னர் கிடைத்த இரண்டு வாகனங்களில் டிபெண்டர் ஜீப் ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சத்திற்கும் வேகன்ஆர் 65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.



டிபென்டரை ரக வாகனத்தை வாங்கிய நபர் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாவுக்கு வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விகாராதிபதியின் சடலம் விகாரையில் இருந்த நிலையில்வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இரண்டு வாகனங்களையும் விற்றுவிட்டு, பின்னர் விகாரை மடாதிபதியிடம் இருந்த பணம் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக் கொண்டு, துபாய் செல்வதற்கான திட்டத்துடன் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.


விகாரையிலிருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தேரரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது சந்தேகநபரான பிக்குவை காணவில்லை பொலிஸார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.


திட்டம் தீட்டிய டுபாய் காதலி

பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேராவின் பணிப்புரையின் பேரில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு அதிகாரிகளுக்கு சந்தேகநபரின் புகைப்படம் வழங்கப்பட்டது.


இதன்படி நேற்று அதிகாலை 1.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் செல்ல முயன்ற சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ​​கொலைத் திட்டம் துபாயில் உள்ள தனது காதலியால் தயாரிக்கப்பட்டது என்று கூறினார்.



விகாராதிபதியை கொலை செய்துவிட்டு டிபெண்டர் மற்றும் வேகன்ஆர் ஆகியவற்றை எடுத்து விற்று பணத்தை டுபாய்க்கு அனுப்புமாறு தனது காதலி பல சந்தர்ப்பங்களில் தன்னை அச்சுறுத்தியதாகவும் சந்தேகநபர் கூறியுள்ளார்.


இந்நிலையில், தேரரின் கொலையுடன் தொடர்புடைய டுபாய் காதலியின் தாய் மற்றும் தந்தையை கண்டுபிடிக்க மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.    Tamilwin

No comments

Powered by Blogger.