திருட்டுக் கூட்டத்தின் புண்ணியத்தில் ஜனாதிபதியான ரணில் தன்னை தசுன் ஷானகவுடன் ஒப்பிடுவது நகைப்புக்குரியது
பின்னடைவை சந்தித்திருந்த இலங்கை கிரிக்கெட் அணியை ஆசியாவின் சம்பியனாக உயர்த்திய அணித் தலைவர் தசுன் ஷானகவுடன் தான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவானதை ஒப்பிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சி நகைப்புக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக செய்த அர்ப்பணிப்பின் பிரதிபலனாக தசுன் ஷானக, சகல துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்தி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவிக்கு தெரிவானர்.
எனினும் ரணில் விக்ரமசிங்க திருடர்களின் புண்ணியத்தில் ஜனாதிபதி பதவிக்கு தெரிவானார். தசுன் ஷானக தனது நாட்டை ஆசியாவில் உயர்ந்த இடத்தில் வைக்கும் போது ரணில் விக்ரமசிங்க தனக்கு உதவி திருட்டுக்கூட்டதை பாதுகாப்பதை மாத்திரமே செய்கின்றார்.
கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு செல்ல காரணமாக அமைந்த எந்த நெருக்கடிக்கும் ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் தீர்வு கிடைக்கவில்லை.
தீர்வு கிடைத்தது என்று நம்பவும் முடியாது. ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கோ, மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கோ எவ்வித தேவையுமில்லை.
பொதுஜன பெரமுனவின் விருப்பங்களை நிறைவேற்ற மறுத்தால் ஜனாதிபதி வீட்டுக்கு செல்ல நேரிடும்
அடுத்த இரண்டரை ஆண்டுகள் எப்படியானவது ஜனாதிபதி நற்காலியை பாதுகாக்க வேண்டும் என்பதே அவரது ஒரே நோக்கம். இதற்காக பொதுஜன பெரமுனவின் திருட்டுக்கூட்டத்திற்கு அனைத்து சிறப்புரிமைகளையும் வழங்கி வருகிறார்.
ஏதோ ஒரு விதத்தில் பொதுஜன பெரமுனவின் திருட்டுக்கூட்டத்தின் விருப்பு, வெறுப்புகளை நிறைவேற்ற மறுத்தால், அதற்கு அடுத்த நாள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி நாற்காலியில் இருந்து எழுந்து வீட்டுக்கு செல்ல நேரிடும் எனவும் சமிந்த விஜேசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment