Header Ads



இலங்கைக்கு வந்துள்ள புதியவகை பறவைகள் - திருகோணமலையில் அதிகளவு நடமாட்டம்


திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்தில் புதிய வகை ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகள் அதிகளவில் நடமாடுவதை காணக் கூடியதாக இருக்கின்றது.


காலநிலை மாற்றத்தினால் இந்த பறவைகள் வருகை தந்திருக்கலாம் என பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.


திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதியினூடாக செல்லும் வழியில் மஹதிவுல்வெவ குளம் அமைந்துள்ளது.


இக்குளத்தில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகள் சுற்றித் திரிவதனால் பார்ப்பதற்கும் அழகாக அக்குளம் காட்சியளிக்கிறது.


இந்த பறவைகள் ஒரே நேரத்தில்,பல முறைகளில் வட்டமாகவும் நீண்ட வரிசையிலும் நின்று கொண்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.


வீதியால் செல்பவர்களை பார்க்கத் தூண்டும் வகையில் மிகவும் அழகான முறையில் இந்த பறவைகள் செயல்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. TW

No comments

Powered by Blogger.