Header Ads



என் இரத்தத்தில் விளையாட்டு உள்ளது - நாமல்


இலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ணத்தை வென்றதை அடுத்து, இது வெற்றிகளின் ஆரம்பம் என்றும், இன்னும் பல வெற்றிகள் உள்ளன என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


விளையாட்டுத் துறை அமைச்சர் யார் என்பது முக்கியமில்லை என்றும், அமைப்பில் தலையிடாவிட்டால் வெற்றிகள் அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


புதிய அணித்தலைவர், அணி வீரர்களை கொண்டு வருவதற்காக இலங்கை அணி ஆட்டங்களில் தோல்வியடையும் போது மற்றும் உடற்தகுதி கட்டாயப்படுத்தப்பட்ட போது தான் விமர்சிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


“விளையாட்டு என் இரத்தத்தில் உள்ளது, நான் விளையாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்தேன், என்னை உருவாக்க முயற்சித்தேன், நான் அவர்களுக்கு உதவாததால், சில விளையாட்டு பேரவை தேர்தல்களால் எங்கள் சொந்த முகாமில் இருந்து எதிரிகளை உருவாக்கினேன். அமைப்பில் யாராவது குறுக்கிடும்போது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். வீரர்கள் விளையாட வேண்டும்,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Very True. Your Family has been playing Games with the Lives of the citizens of Sri Lanka for too Long. Don't think you can do it for much longer. Your Days and your Family's days are Numbered,

    ReplyDelete
  2. ஆம் உமது இரத்தத்தில் பொதுமக்களின் சொத்துக்களைச் சூறையாடும் வலு இருக்கின்றது. ஒவ்வொரு நிமிடமும் பொதுச்சொத்துக்களைக் கொள்ளையடிப்பது, பொது மக்களின் அத்தியாவசியப் பொருட்களை வௌிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்யும் போது உச்ச கொமிஷன் அடிப்பது எவ்வாறு என்ற தீய பாவச் செயல்களைத் தூண்டும் சக்தி தான் உமது இரத்தத்தில் உள்ளது. அந்த தீய சக்திகள் ராஜபக்ஸ குடும்பத்தின் இரத்தத்தில் ஏனையவர்களை விட பலமடங்காக இருக்கின்றது. அது உலகறிந்த இரகசியம். அதைத்தான் அமெரிக்க செனட் சபையின் அங்கத்தவர்கள் மூன்று பேர் மிகச் சுருக்கமாக ' பொதுமக்களின் சொத்துக்காளால் ராஜபக்ஸாக்கள் செல்வந்தர்களாக மாறியுள்ளனர் எனக்கூறியுள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.