ஆர்ப்பாட்டங்களுக்கு அஞ்சி சில பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் - வர்த்தமானி வெளியிட்டார் ரணில்
கொழும்பு மாவட்டத்தில் உள்ள அதி முக்கியமான இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதன்படி பாராளுமன்ற கட்டடத் தொகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள்,
புதுக்கடை நீதிமன்ற தொகுதியில் உயர்நீதிமன்றம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள்,
ஜனாதிபதி செயலகம்,
ஜனாதிபதி மாளிகை,
கடற்படை தலைமையகம்,
பொலிஸ் தலைமையகம்,
பாதுகாப்பு அமைச்சு,
இராணுவ தலைமையகம்
பிரதமர் அலுவலகம்,
அலரிமாளிகை மற்றும் அதனை அண்மித்த பகுதிகள்
பாதுகாப்பு செயலாளர் மற்றும்
முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் இருக்கும் பகுதிகள்
அதிவுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன
ஒரு நாட்டின் சட்டத்தையும், அந்த நாட்டின் நீதித்துறையையும் ஒரு தனி நபரின் சொந்த தேவைக்காக பயன்படுத்த முயற்சி செய்வது அந்த நபரின் பத்து பரம்பரைகளையும் அழித்து நாசமாக்குவதற்குச் சமமாகும். இப் பாரதுரமான செயலின் தாக்கத்தை நிச்சியம் அந்த செயலில் ஈடுபடும் நபரும் புரிந்திருக்கமாட்டார்கள். இதனைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க முடியாத மனக்கவலை காரணமாக எனது ஆதங்கத்தை இங்கு செய்கின்றேன்.
ReplyDelete