அரசியல்வாதிகளின் மோசமான செயற்பாடு
கடந்த மே மாதம் 9ஆம் திகதி பல அரசியல்வாதிகளின் வீடுகள் முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டிருந்தன.
இந்த தாக்குதல்களின் போது ஏற்பட்ட சேதப் பெறுமதியை இரண்டு மடங்காக உயர்த்திக் கொள்வதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேதமடைந்த வீடுகள் போலி சேத மதிப்பீடுகளை சமர்ப்பித்து பல கோடி ரூபா பணம் பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்படுவதாக தெற்கு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
சேதமடைந்த ஒரு வீட்டை இரண்டு வீடுகளாக காண்பித்து மதிப்பீட்டு தொகையை அதிகரித்துக் கொள்ள முயற்சிப்பதாக அந்த செய்தியில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த தொகைகளை விடவும் கூடுதல் தொகை பணத்தை பெற்றுக் கொள்வதற்கு ஐந்து அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சேதமடைந்த வீடுகளில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணம் இருந்ததாகவும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து சில அரசியல்வாதிகள் லாபமீட்ட முயற்சிப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment