சர்வதேசத்தின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் - ஐ.நா.வில் அலிசப்ரி உரை
தவறான மற்றும் நிதிச் சரிவை எதிர்கொள்ளும் அரசாங்கங்களால், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் அவற்றின் பொருளாதாரங்களும் தீவிர ஆபத்தில் உள்ளன என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வில் நேற்று உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் வெளி மற்றும் உள்நாட்டு சவால்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திற்கான கூட்டுப் பார்வையை உணர இதுவே தருணம் என்று இலங்கை நம்புகிறது. அத்துடன் அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் நியாயமான, நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் இலங்கை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வௌிநாட்டு அமைச்சர் அலி சப்ரியின் பேச்சை வாசிக்கும் போது ஒரேயொரு விடயத்தைத்தான் விபரமாகத் தெரிவிக்கின்றார். இலங்கை ஒரு பிச்சைக்கார நாடு, நீங்கள் எல்லோரும் எங்களுக்குப் பிச்சை போட்டால் தான் நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்பி அமெரிக்காவின் தரத்துக்கு இலங்கையைக் கொண்டுவர முடியும் என கூறும் போது பிச்சைக்காரன் முன்னேற்றமடைந்த வரலாறு உலகில் எங்காவது இருக்கின்றதா? பிச்சைக் கேட்பவன் அவனுடைய உடலில் தசைகளும் கவர்ச்சிகளும் போய், எலும்புக்கூடு எஞ்சியிருக்கும் வரை பிச்சை கேட்டுக் கொண்டே இருப்பான் என உலகப் புகழ்பெற்ற ஒரு வாக்கு இருக்கின்றது. இலங்கையை விட பொருளாதாரத்தில் மிக மோசமான பல நாடுகள் உலகில் காணப்படுகின்றன.ஆனால் அவை எதுவும் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு உலகை வலம் வந்ததாக வரலாறு இல்லை. அந்த வகையில் உலகில் விசேட தன்மை கொண்ட ஒரே பிச்சைக்கார நாடு இலங்கை தான். அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் கோட்டையும் டையையும் அணிந்து கம்பீரமாக உலக நாடுகளின் முன்னால் நின்று எங்களுக்குப் பிச்சை போடுங்கள் அப்பொழுதுதான் நாங்கள் முன்னேற்றமடையலாம் என உலகில் எங்கும் சாத்தியமில்லாத ஒரு பொய்யையும் பெருமையாகக் கூறும் நபருக்குப் பெயர் இலங்கையின் வௌிநாட்டு அமைச்சர். ஆம் உலகில் ஈடு இணையற்ற ஒரே நாடு இலங்கை!!!
ReplyDelete