அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கியது, எமது இனத்தின் தாய் ஒருவரின் மகனே
போராட்ட இயக்கத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தடுத்து வைத்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதைக்கு உள்ளாக்குவது வருந்தத்தக்கது என வேடுவ சமூகத்தின் தலைவர் உரு வாரியே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார்.
தம்பன, கொட்டபாகினிய கிராமத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய உருவரிகே வன்னில அத்தோ, போராட்ட இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளரான வசந்த முதலிகேவை தடுத்து வைத்துள்ளமை குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏதேனும் குற்றம் இழைக்கப்பட்டிருந்தால், தகுந்த தண்டனையை வழங்குவது நியாயமானது.
எனினும் அவர்களை நீண்ட காலம் தடுத்து வைத்து, உடல் மற்றும் மனரீதியான சித்திரவதைகளுக்கு உட்படுத்துவது பொருத்தமானதல்ல என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கியது தமது இனத்தின் தாய் ஒருவரின் மகன் எனவும் வேடுவ தலைவர் உரு வாரியே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார்.
வேடுவ சமூகத்தின் தலைமைத்துவத்துக்குத் தௌிவாக விளங்கும் உண்மையும் யதார்த்தமும் நாகரிக சமூகத்தைச் சேர்ந்த அரசியல் செய்யும் மந்தி(ரி)களுக்கு புரியாமல் இருப்பது இந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் பாரிய இழப்பாகும். புராதன சமூத்தைச் சேர்ந்த வேடுவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்தால் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் என மக்களை நம்பத் தூண்டுகின்றது.
ReplyDelete