ரணிலுடன் இறுதிச் சடங்கிற்கு சென்றவர்கள் தொடர்பில் சர்ச்சை - ஜனாதிபதி செயலகம் என்ன கூறுகிறது..?
லண்டனில் இடம்பெற்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கிற்கு இலங்கையின் பிரதிநிதிகள் சென்றது தொடர்பில், பெயர் குறிப்பிடப்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குறிப்பிடப்படாத சமூக ஊடகங்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாக ஜனாதிபதி செயலகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் உறவினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவான் விஜேவர்தனவும் லண்டனில் ஜனாதிபதியுடன் பிரசன்னமாகியுள்ளார்.
இந்தநிலையில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராகவும் இருக்கும் விஜேவர்தன, ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், லண்டனில் இலங்கையின் புலம்பெயர்ந்தோருடனான சந்திப்பில் ஜனாதிபதியின் தரப்பினருடன் இணைந்துகொண்டதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா மற்றும் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் தினுக் கொலம்பகே ஆகியோர் அரச செலவில் ஜனாதிபதியுடன் சென்றிருந்த ஒரே அதிகாரிகள் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதல் பெண்மணி மைத்திரி விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் அவரது தனிப்பட்ட செலவிலேயே லண்டன் சென்றார் என்றும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment