Header Ads



வழக்கு தாக்கல் செய்யாமல் இருக்க, பெண் ஒருவரிடம் லஞ்சம் கோரிய பொலிஸ் சார்ஜன்


- Ismathul Rahuman -


    விபத்துச் சம்பவம் தொடர்பாக வழக்கும் தாக்கல் செய்யாமல் இருப்பதற்காக  பெண் ஒருவரிடம் லஞ்சம் கோரிய பொலிஸ் சாஜன் வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

       இவ்வாறு இடைநிறுத்தப்பட்டவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சாஜனாவர்.

    கடந்த 28ம் திகதி நீர்கொழும்பு, தெல்வத்தசந்தி பிரதேசத்தில் அவர் கடமையில் இருந்தபோது அங்கு ஏற்பட்ட விபத்தில் ஆட்டோ வண்டியை செலுத்தயவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்காக வழக்கும் தாக்கல் செய்யாமல் விடுவிப்பதற்காக அவரின் தாயாரன பல்லேவெள, குகுல்நாபேயைச் சேர்ந்த தஹனக முதியான்சலாகே நாலனி குமாரியிடம் 15 ஆயிரம் ரூபா லஞ்சம் கேட்டு பலவந்தப்படுத்தியதாகவும் ஆட்டோ வண்டியிலிருந்த கையடக்க தொலைபேசியை தருவதற்காக ஆயிரம் ரூபா கோரியதாகவும் நீர்கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேராவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

   சமன் சிகேராவின் ஆலோசனைக்கு இனங்க நடாத்திய புலன் விசாரணையின் பின்னர் குறித்த பொலிஸ் சாஜன் ஆகஸ்ட் 31 திகதி முதல் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.