நாட்டு பிரச்சினைகளை தீர்க்காது மகாராணியின் மறைவுக்கு ஆறுதல் கூறுவது ஜனாதிபதிக்கு முக்கியமானதா..? அதற்கு டொலர்களும் உள்ளதா..??
நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதை விட்டுவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று மகாராணியின் மறைவுக்கு ஆறுதல் கூறுவது ஜனாதிபதிக்கு முக்கியமானது. அதற்கு டொலர்களும் உள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான இந்தியா கூட அவ்வாறு செய்யவில்லை என சுட்டிக்காட்டிய வீரவன்ச, இந்தக் குழு இன்னும் அடிமை மனப்பான்மையிலேயே இருப்பதாகவும் தெரிவித்தார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று 8.23 அளவில் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் டுபாயிலிருந்து ஈ கே 650 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment