Header Ads



"போதைப்பொருளை ஒழிக்க, ஒரேயொரு வழி"

முக்கிய போதைப்பொருள் வர்த்தகர்களை கைதுசெய்யாமல் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கையை ஒருபோதும் குறைக்க முடியாது என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.


நாட்டில் தற்போது போதைப்பொருள் பாவனையாளர்கள் வெகுவாக அதிகரித்துவரும் நிலையில் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பில் கவலையடைய நேர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


போதைப்பொருளுக்கு அடிமையானோரை
கைதுசெய்யும் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் சிறைச்சாலைகள் கட்டமைப்புக்கு அதனை சுமக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் முக்கிய போதைப்பொருள் வர்த்தகர்களை


கைதுசெய்வதன் மூலம் போதைப்பொருள் பாவனையாளர்களை குறைக்கமுடியுமென்றும் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பொலிஸார் தொடர்பில் மக்களுக்குள்ள நம்பிக்கையற்ற தன்மையை இல்லாதொழிப்பது அவசியமாகும். அதன் மூலமே குற்றவாளிகள் தொடர்பான சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதை இலகுவாக்க முடியும். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய முக்கிய நிறுவனமான பொலிஸ் நிலையங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் செயற்படுவது அவசியமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.