"நாட்டின் பெரும்பான்மையான மக்கள், ராஜபக்சர்களை தொடர்ந்தும் ஆதரிக்கிறார்கள்" - சாகர
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ராஜபக்சர்களை தொடர்ந்தும் ஆதரிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டுக்கும், எமது கட்சிக்கும் பலமாக ராஜபக்சர்களின் அரசியல் காணப்படுகின்றது. கட்சி என்ற ரீதியில் இதனை நாம் தைரியமாக கூறுவதோடு ராஜபக்சர்களுடன் எதிர்கால அரசியலில் நாம் ஈடுபடுவோம்.
எனது தனிப்பட்ட கருத்தும், கட்சியின் பெரும்பான்மையினரது கருத்தும் ராஜபக்சர்கள் பதவிகளிலிருந்து விலகியது பிழை என்பதாகும்.
ஏனெனில் 69 இலட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ராஜபக்சர்கள் ஒரு இலட்சம் பேர் வீதியில் இறங்கி போராடியதன் காரணமாக ஆட்சிப் பொறுப்பினை விட்டிருக்க வேண்டியவதில்லை.
மக்களின் வாக்குகளிலே ராஜபக்சர்கள் ஆட்சி பீடம் ஏறினார்களே தவிர பலாத்காரமாக அல்ல.
நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்சவை நாங்கள் சந்தித்த போது, அவர் அரசியலில் ஈடுபடும் எந்தவொரு முனைப்பையும் வெளிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
நக்கியவன் நாவிழந்தான் என்பது போல ராஜபக்ஸாக்களின் மடியில் உண்டு களித்த சாகரவுக்கு ராஜபக்ஸாக்களுக்கு வக்காளத்து வாங்குவது மட்டும் தான் தெரியும். அந்த 69 இலட்சம் மக்களிடம் போய்க் கேட்டால் ராஜபக்ஸாக்கள் யார் என உப்பு மஷாலாக்களுடன் சொல்லிக் கொடுப்பார்கள்.சாகல இன்னும் ஒருதடவை அந்த 69 இலட்சத்தையும் போய்க் கேட்குமாறு பொதுமக்கள் அந்த அடிவருடியிடம் கேட்கின்றார்கள்.
ReplyDelete