பிரச்சினை தற்காலிகமாக அடங்கியுள்ளது, மிக பாரதூரமான நிலைமை ஏற்பட வாய்ப்பு - சபாநாயகர்
காலி ஹபரகடவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாத மட்டத்திற்கு நாடு சென்றால், மதத் தலைவர்கள் மாத்திரமல்ல அரசாங்கத்தினாலும் எதனையும் செய்ய முடியாது. இதனால், நாடு அந்த நிலைமைக்கு செல்ல இடமளிக்காது நாட்டை பாதுகாக்க வேண்டியது அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்.
நாட்டில் எப்படியான நிலைமை இருந்திருந்தால், நாட்டின் ஆட்சியாளர் நாட்டின் ஆட்சியை கைவிட்டு சென்றிருப்பார். தமது ஆட்சியை கைவிட்டு, யாருக்கும் தெரியாமல் திடீரென செல்லும் அளவுக்கு நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள், சிக்கல்கள் அழுத்தங்கங்கள் இருந்திருக்கும்.
அந்த அழுத்தங்களும் பிரச்சினைகளும் இன்னும் முடியவில்லை. தற்காலிகமாக அடங்கியுள்ளது. சிறிது ஆறுதல் கிடைத்துள்ளது.
தற்போது விகாரைகள் உட்பட அனைவருக்கும் மின் கட்டணங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இது தாங்கிக்கொள்ளக் கூடிய சுமையல்ல. தண்ணீர் கட்டணங்களும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
மிகப் பெரிய செலவை சமாளிக்க வேண்டியுள்ளது. மிகவும் கவனமாகவும் சிக்கனமாகவும் மின்சாரம் மற்றும் தண்ணீரை பயன்படுத்த வேண்டியுள்ளது. விகாரைகளால், அதனை செய்ய முடியாது அவை பொது இடங்கள்.
விகாரைகளை இருளில் வைத்திருக்க முடியாது. விகாரைகளுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மின்சக்தி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி விகாரைகளுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளேன் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் உண்மையை உரைக்கும் சபாநாயகர் தொடர்ந்து துவேசத்தை மாத்திரம் கக்குகின்றார். இந்த நாட்டில் விகாரைகள் போலவே, இந்து கோயில்கள், ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலங்கள், முஸ்லிம்களுடைய பள்ளிவாயல்கள் நூற்றுக்கணக்காக இருக்கின்றன. அவற்றின் மேலதிகமாக வரும் மின்சார, நீருக்கான செலவுகளை யார் செய்யப் போகின்றார்கள்? அவைகள் அனைத்துக்கும் மின்சார,நீர் வரியில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அவை பொது இடங்கள். அங்கே அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் போட வழியில்லை. எனவே பாராளுமன்றத்தில் சபாநாயகர் என்பவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். அவருடைய பேச்சில் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் தேவைகளும் வௌியாக வேண்டும். அதை விட்டு பௌத்த ஆலயங்கள் மட்டும்தான் அவருக்குத் தெரிகின்றது. இந்த துவேசிகள் தான் நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லுபவர்கள் என்பதை பொதுமக்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அத்துடன் நாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் விட்ட கோரிக்ைக ஒன்றுதான். உரியமுறையில் ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாவிட்டால் தேர்தலை வையுங்கள். மக்களுக்குத் தேவையான ஆட்சியை அவர்கள் தெரிவு செய்வார்கள். அதனை விட்டு விட்டு போடும் திட்டங்கள் அனைத்தும் சுயநலம், பெருச்சாலிகளின் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளும் சூழ்ச்சிகள் தவிர அவை மக்களுக்கோ நாட்டுக்கோ எந்தப் பயனும் இல்லை. சுருங்கக்கூறின் பயங்கரமான அழிவுக்கும் படுகொலைக்கும் நாட்டை இட்டுச் செல்வது சுயநலத்துடன் செயல்படும் கள்ளக்கூட்டமான ஆட்சியாளர்கள்தான்.
ReplyDelete