சந்தேக நபராக மைத்திரிபால
ஏப்ரல் தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அத்துடன், குறித்த தனியார் மனுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேக நபராக பெயரிட நீதவான் திலின கமகே தீர்மானித்துள்ளார்.
அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் 298 பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தனிப்பட்ட மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.
சிரிபால டி சில்வா விமானத்துறை அமைச்சராக பணியாற்றும் போது பட்டப்பகலில் ஐப்பானிய குழுவிடம் இலஞ்சம் கேட்டதை, ஜப்பான் தூதுவர் கோதாவிடம் முறையிட உடனடியாக அமல்படுத்தும் வகையில் பதவியிலிருந்து விலக்கப்பட்ட நிமல் சிரிபால சில்வா ரணில் சனாதிபதியாகி சில நாட்களுள் அவரால் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் அவர் குற்றமற்றவர் என விடுதலை செய்து அடுத்த நாளே மந்திரியாக நியமிக்கப்பட்டதன் மூலம் முழு உலகில் உள்ள மக்களையும் நாடுகளையும் மடையனாக்க எடுத்த முயற்சி நிச்சியம் வரலாற்றில் இலங்கை அரசின் கருப்புப்புள்ளியாக பதிவு செய்யப்படும். அது போன்று மைத்திரியையும் போலியாகப் பாதுகாக்காது சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்ய சனாதிபதியும் மந்தி(ரி)மார்களும் எந்தவகைத் தலையீட்டையும் சட்டத்தில் செய்யக்கூடாது. அதனையும் உலக மக்கள் உன்னிப்பாக நோட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ReplyDelete