Header Ads



ஜனாஸா அறிவித்தல் - அனிஷா


அஸ்ஸலாமு அலைக்கும்


யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், மதுரங்குழி ஜின்னாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ம. ந.சு.ந  மர்ஹூம் சாகுல் ஹமீது பிபி ஆகியோரின் இரண்டாவது மகளான அனிஷா 03.09.2022 அன்று காலமானார். 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 


அன்னார் அசங்கனி யமானியின் மனைவியும், இஷாரா, ரசாத், பாசித் ஆகியோரின் தாயாரும், நஜாத், ஜான்சனா, மனாஸ் ஆகியோரின் சகோதரியும், மர்ஹும் அசங்கனி, ஹனுல் ஆகியோரின் அன்பு மருமகளும், ஷகிலா பேகம், சிஹானா, பிர்தவுஸ், ரூமி, இம்ரான், சித்திக் ஆகியோரின் மைத்துனியும் ஆவார். 


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம், கடையா மோட்டை மையவாடியில் நாளை 4. 9 .2022 அன்று காலை 10 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும். 


இன்ஷா அல்லாஹ்.


 தகவல். கணவர் யமானி.



ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ


اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ

அல்லாஹும்மபி[F]ர் லஹு வர்ஹம்ஹு வஆபி[F]ஹி வபு[F] அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B]ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B]ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B]ல் அப்(B]யள மினத் தனஸி வ அப்(B]தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B]ல் கப்(B]ரி


இதன் பொருள் :


இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!


ஆதாரம்: முஸ்லிம்-1756 (1600)

No comments

Powered by Blogger.