மாணவர்களின் பைகளை சோதனையிட தீர்மானம் - கல்வியமைச்சு அதிரடி, பெற்றோர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்பட கோரிக்கை
பாடசாலை மாணவர்கள் போதைபொருளுக்கு அடிமையாவதைத் தடுக்கும் நோக்கில், மாணவர்களின் பாடசாலை பையை சோதனையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட உள்ளதாகவும், ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களின் பைகளில் சூட்சுமமாக வைக்கப்படுகிறது என்றார்.
இது தொடர்பில் பெற்றோர்களும் பாடசாலை சமூகத்தினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் (07) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment