விமர்சனங்களை கருத்திற் கொள்ளப் போவதில்லை - ஞானசார தேரர்
சமூக ஊடகங்களில் அண்மைய நாட்களில் செய்யப்பட்டு வரும் விமர்சனங்களை தாம் கருத்திற் கொள்ளப் போவதில்லை என பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் எவர் வேண்டுமானாலும் விமர்சனங்களை செய்ய முடியும் எனவும், அதனை யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு விசேட அதிதியாக அவர் குறித்த நிகழ்வில் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதி தேசிய தின நிகழ்வுகளை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டுக்கான கொழும்பு தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வுகளில் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் பங்கேற்றிருந்தார்.
இதனையடுத்து இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் சவூதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் ஞானசார தேரர் பங்கேற்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன.
அத்துடன் பிரதமர் தினேஸ் குணவர்தனவுடன், ஞானசார தேரரும் சவூதி தேசிய தின நிகழ்வில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. tamilwin
Post a Comment