முஸ்லிம் சமூகத்துக்கென நிர்மாணிக்கப்பட்ட 9 மாடி கட்டிடத்தை சுவீகரிக்கவுள்ள புத்தசாசன அமைச்சு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமூகத்துக்கென நிர்மாணிக்கப்பட்டு தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயங்கிவரும் 9 மாடி கட்டிடத்தை சுவீகரிக்கும் நடவடிக்கைகளை புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருட ஆரம்பத்தில் கட்டிடத்தை புத்தசாசன அமைச்சு கையேற்பதற்கு அனுமதி பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த 9 மாடி கட்டிடத்தை பொறுப்பேற்று அங்கு இந்து விவகார, மற்றும் கிறிஸ்தவ விவகார திணைக்களங்களை இடமாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கட்டித்தில் மூன்று மாடிகளை தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பயன்படுத்தி வரும் நிலையில் ஏனைய மாடிகள் பூரணப்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன.
ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயங்கிவரும் கட்டிட காணி நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் கையேற்கப்பட்டு வழங்கப்பட்டதாகும். இந்தக் கட்டித்துக்கான உறுதி முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு மாற்றம் செய்வதற்கான இறுதி கட்டத்தில் உள்ள நிலையிலே புத்தசாசன அமைச்சினால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூன்று மாடிகள் தவிர்ந்த ஏனைய மாடிகளின் சாவிக் கொத்துகளை திருப்பி கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்கட்டிடம் முஸ்லிம் சமூகத்தின் சொத்தாகும். தற்போது பூரணப்படுத்தப்படாதுள்ள மாடிகளில் தற்போது இட நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் காதிகள் மேன்முறையீட்டு சபையை இங்கு இடமாற்ற முடியும். மற்றும் ஹஜ் முகவர்கள் சங்கத்துக்கும், முஸ்லிம் சமூகநல இயக்கங்களுக்கும் வாடகைக்கு விடமுடியும்.
இவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தலையிட்டு கட்டிடத்தை பாதுகாப்பதற்கு செயலில் இறங்க வேண்டும். தற்போதைய அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க முஸ்லிம் சமூகத்துடன் நெருக்கிய தொடர்புகளைப் பேணுபவர். அவர் இதுவிடயம் தொடர்பில் மீள்பரீசீலனை செய்ய வேண்டுமென முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. – Vidivelli
ஊழல் நிறைந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் சிவில் சமூகத் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களையும், சமூகத் தலைவர்களையும் எப்பொழுதும் இந்த பத்திகளில் புகழ்ந்தும், பாதுகாக்கும் பத்திரிகையாளராகவும் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் இந்த வலைத்தளத்தில் அல்லது விடிவெள்ளி முஸ்லீம் சமூகத்தின் "ரியாலிட்டி பிரச்சினை அல்லது பிரச்சினைகள்" பற்றி நீங்கள் பேசவில்லை அல்லது எழுதியதில்லை. இந்த அரசியல்வாதிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் / மசூதி அறங்காவலர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடையே மிகப்பெரிய பிரச்சினை ஊழல் மற்றும் மோசடி ஆகும்.
ReplyDeleteகாலஞ்சென்ற கௌரவ எம்.எச்.மொஹமட் அவர்களினால் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இதுவரைபல மில்லியன் $ / மில்லியன் கணக்கான ரூபா பணம் இப்போது வரை செலவழிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் முஸ்லீம் அதிகாரிகளால் செலவழிக்கப்பட்ட திட்டச் செலவு மதிப்பிடப்பட்ட தொகையை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகம் என்றும், பெறப்பட்ட வெளிநாட்டு நிதிகள் கணக்கிடப்படவில்லை என்றும் கருதினர். எனவே நீங்கள் ஏன் இந்த உண்மைகளைப் பற்றி எழுதவில்லை மற்றும் இந்த ஊழல்களில் ஈடுபட்ட முஸ்லீம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஊழலை அம்பலப்படுத்தவில்லை. நீங்கள் இப்போது சில பெளத்த அமைச்சர்கள் இந்த கட்டிடத்தை எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் பற்றி எழுதுகிறீர்கள் மேற்குறிப்பிட்ட விடயங்களைப் பற்றி தமது (பௌத்த) அமைச்சின் பாவனைக்காக கட்டிடத்தை எடுத்துச் செல்வதில் ஆர்வமுள்ள சில அமைச்சு/ அமைச்சரின் விடயம் நாட்டைக் குழப்புவதற்கும், முஸ்லிம்களை உராய்ந்த ஆடுகளாக்குவதற்கும் இத்தகைய வழிகளுக்காக எப்பொழுதும் காத்திருக்கும் வெறித்தனமான கோணலான முஸ்லீம் கும்பல்களைத் தூண்டிவிடுவதன் மூலம் வகுப்புவாத ஒற்றுமையைத் தூண்டிக்க முயற்சிக்கிறீர்களா?
தயவுசெய்து முதலில் முஸ்லீம் அரசியல் மற்றும் உத்தியோகபூர்வ வட்டாரங்களில் ஊழல் பற்றி எழுத மற்றும் அவர்களை அம்பலப்படுத்த நீங்கள் முயற்சிக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் பின்னர் Allmighty அல்லாஹ் எங்கள் சமூகத்திற்கு தீங்கு செய்ய அனுமதிக்க மாட்டான்.
Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, Convener "The Muslim Voice".
சமூகத் துவேசத்தின் மற்றுமோர் அம்சம் தான், அரசாங்கம் வழங்கும் சலுகைகைளைப் பயன்படுத்தி கட்டப்பட்ட கட்டடத்தின் இதுவரை பாவிக்காக பகுதிகளை பிரதான அமைச்சு வேறு அமைச்சின் காரியாலங்களை அமைப்பது அரச மட்டத்தில் எந்தப் பிழையும் இல்லை. அந்தக் கட்டடத்தில் அது முஸ்லிம்களின் சொத்து என எழுதப்பட்டு இல்லை. அரச கட்டடங்கள் அரசின் எந்த உத்தியோகபூர்வமான தேவைகளுக்கும் பாவிக்கலாம். அதனையும் இனத்துவேசத்துக்கு இழுக்கும போக்கு குறுகிய இனவாதச்சிந்தனையாகும். அதனைத்தான் நபியவர்கள் ஒருமுறை' ஒரு ஸஹாபியைப் பார்த்து ' உங்களிடத்திலே ஜாஹிலிய்யாக் கருத்துக்கள் ஊன்றியிருக்கின்றது' எனக்கூறினார்.
ReplyDelete