டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 85 இலங்கை பெண்கள் - நாடு திரும்பிய பெண் தெரிவிப்பு
துபாயில் தடுப்பு முகாம் ஒன்றில் அறைக்குள் இலங்கை பெண்கள் 85 பேர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அந்த அறையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த நிலையில் நாடு திரும்பிய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக துபாய் சென்ற தம்புளு ஓய பிரதேசத்தை சேர்ந்த லலிதா பத்மினி என்ற பெண் துபாய் தடுப்பு முகாமில் மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் நாடு திரும்பியுள்ளார்.
தான் அங்கு அனுபவித்த கசப்பான அனுபவங்கள் தொடர்பான அந்த பெண், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், தம்புள்ளை பொலிஸ் நிலையம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்திற்கும் அறிவித்த போதிலும் இதுவரை எந்த நியாயமும் கிடைக்கவில்லை என அந்த பெண் கூறியுள்ளார்.
தம்புள்ளையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்தின் ஊடாக துபாய் அனுப்பி வைக்கப்பட்ட தனது சகோதரியான துலிகா பிரியந்தி என்பவர் அங்கு கைவிடப்பட்ட நிலைமையில் இருப்பதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் மூன்று மாதங்கள் துபாய் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தமது பிள்ளைகள் பெரும் தொகை பணத்தை கடனாக பெற்று தன்னை இலங்கைக்கு வரவழைத்ததாகவும் லலிதா பத்மினி கூறியுள்ளார்.
Post a Comment