83 பேர் கைது: உடனடி அறிக்கை கோரியது மனித உரிமைகள் ஆணைக்குழு
சோசலிச இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தின் போது 83 பேர் கைது செய்யப்பட்டமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடி அறிக்கையொன்றை கோரியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை நாளை(26) காலை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையை பரிசோதிப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் நேற்றிரவு(24) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பில் இடம்பெற்று வருகின்றன.
Post a Comment