Header Ads



கொத்து ரொட்டி 700 ரூபாவாக விற்பனை


கோதுமை மாவின் விலை அதரிகரிப்பு காரணமாக சிற்றுணவகங்களில் சிற்றுணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


சிற்றுணவக உரிமையாளர்களே, தமது உற்பத்திகளுக்கான விலைகளை அதிகரித்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதன்படி, கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


முட்டை ரொட்டி, பராட்டா, மரக்கறி ரொட்டி மற்றும் ரோல்ஸ் உள்ளிட்ட சிற்றுணவுகளின் விலைகள் 10 முதல் 20 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரிகக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.


தற்போது சிற்றுணவகங்களில், அரை இறாத்தல் பாணும், பருப்பு கறியும் 250 ரூபா என்ற அளவிலும், கால் இறாத்தல் பாணும், பருப்பு கறியும் 180 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


முன்னதாக நுகர்வோரை பாதுகாப்பதற்காக தாங்கள் விலைகளை தீர்மானித்த போதிலும், தற்போது சிற்றுணவக உரிமையாளர்களே விலைகளை அதிகரித்துள்ளனர்


கருப்புச்சந்தை வர்த்தகர்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் நுகர்வோரே பாதிக்கப்படுகின்றனர்.


600 ரூபாவாக்கு விற்பனை செய்யப்பட்ட கொத்து ரொட்டி, நேற்றிரவு முதல் 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.


100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட மரக்கறி ரொட்டி, இன்று 120 ரூபாவுக்கு விற்பனை செய்யபடுவதாக அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.


1 comment:

  1. ஒரு பிளேட் கொத்து ரொட்டியின் விலை 700 ரூபா போதாது.உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அதன் விலையை 5000 ரூபாவாக உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் இந்த நாட்டு மக்கள் ஒரு உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் .கடந்த காலங்களில் கொத்து ரொட்டியில் எலி, பல்லி மற்றும் பலவகை செத்த பிராணிகள் காணப்பட்டன. அநியாயமாக கொத்து ரொட்டி சாப்பிட்டு மரணித்த எத்தனையோ பேர். அது பற்றி பொதுமக்களுக்கு இப்போது எந்த ஞாபகமுமில்லை. எனவே கொத்து ரொட்டிக்கடைக்காரர்களிடம் இந்த நாட்டு பொதுமக்கள் சார்பாக நான் வேண்டிக் கொள்வது என்னவென்றால் உடனடியாக அதன் விலையை 5000 ரூபாவுக்கு உயர்த்துமாறு மட்டும்தான்.

    ReplyDelete

Powered by Blogger.