6 மாதங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தடுக்க முடியாது
ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தடுக்க முடியாது என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரதன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அநுராதபுரம் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன தேரரை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் நாட்டை நேசிப்பவராக இருந்தால், 6 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என உறுதியளிக்கவும். நிலைமை மாறவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என மத்திய வங்கி ஆளுநரும் ஏற்கனவே கூறினார் என தேரர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார அறிவை வைத்தே மத்திய வங்கி ஆளுநர் கூறுகின்றார். அப்படி நடந்தால் வரப்போகும் போராட்டத்தை நிறுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த தேரர் அங்கு பிரதமருக்கு நீண்ட உபதேசத்தையும் செய்துள்ளார்.
Post a Comment