Header Ads



பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகால தடை - நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது


பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்ட விரோத அமைப்பாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலை 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.


அதனுடன் தொடர்புடைய அமைப்புகளும் சட்ட விரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்தியாவின் பல மாநிலங்களில் பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 95 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செப்டம்பர் 22ம் தேதி ஒரே நாளில் சோதனை நடத்தியது.


இந்தச் சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவித்தன.


தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, அசாம், உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.


என்ஐஏ வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே நாளில் என்ஐஏ, இந்திய அமலாக்கத்துறை, மத்திய ரிசர்வ் காவல் படையினர், மாநில காவல்துறையினர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில்தான் இன்று காலை பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு 5 ஆண்டு கால தடை விதித்துள்ளது.


கேரளாவில் இயங்கி வந்த தேசிய வளர்ச்சி முன்னணி(என்.டி.எஃப்), தமிழ்நாட்டின் மனித நீதிப் பாசறை, கர்நாடகாவைச் சேர்ந்த ஃபோரம் ஃபார் டிக்னிட்டி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து 2007-ஆம் ஆண்டுபாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உருவாக்கப்பட்டது.


பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு பணம் வரும் வழிகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

No comments

Powered by Blogger.