532 கோடி ரூபாய் செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்தார் என்று குற்றம்
532 கோடி ரூபாய் வருமான வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேர்பேச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸை ஒக்டோபர் 3ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரி. என். இலங்கசிங்க, நேற்று (29) அழைப்பாணை பிறப்பித்தார்.
குறித்த வரி ஏய்ப்பு தொடர்பில், பேர்பேச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டட் நிறுவனத்துக் எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2021 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தது.
அந்த வழக்கு கடந்த அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் அர்ஜுன் அலோசியஸை விடுதலை செய்த மேலதிக நீதவான், நேற்றையதினத்தில் மன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று (29) வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாதாத நிலையில் அழைப்பாணை பிறப்பித்து நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தில் சுமார் 688 மில்லியன் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டமைக்கு அர்ஜுன் மஹேந்திரன் பொறுப்பாக இருந்தார் என்றும் அவருக்கு உதவினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் அலோசியஸ் உள்ளிட்ட இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்குற்றங்களைப் புரிவதற்கு அர்ஜுன மஹேந்திரனுடன் இணைந்து சதி செய்தார் என்று அவருடைய மருமகனான அர்ஜுன் அலோசியஸுக்கு எதிராகவும் உடந்தையான இருந்தார் என்ற குற்றச்சாட்டில் அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேனவுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
Post a Comment