Header Ads



பாண் இறத்தல் ஒன்று 500 ரூபா வரை செல்லலாம் - ஆடம்பரப் பொருளாக அப்பம்


பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.


எட்டு சதவீதமாக இருந்த வற் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக இரண்டரை சதவீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாண் விற்பனை சுமார் ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தற்போதைய நிலவரப்படி பாண் இறத்தல் ஒன்று 500 ரூபா வரை செல்லும் எனவும், ஏழைகளின் உணவாக இருந்த அப்பம் தற்போது ஆடம்பர மக்களின் உணவாக மாறியுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட பேக்கரி உரிமையாளர்களின் தலைவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.