ராஜாங்க அமைச்சர்களுக்கு மாதாந்தம் 500 லீட்டர் எரிபொருள் வழங்கப்படும் என அறிவிப்பு
இராஜாங்க அமைச்சுகளுக்கென பிரத்தியேகமாக செயலாளர்களை நியமிக்காதிருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, விசேட சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர்களுக்கு தனியாக நிதி ஒதுக்கப்படாது என எதிர்பார்க்கப்படுவதன் காரணமாக, இராஜாங்க அமைச்சர்களின் விவகாரங்களை ஒருங்கிணைக்க அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஒருவரை நியமிக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சிற்கான தேவைகள் சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஊடாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன் புதிய பதவிகளை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் முன்வைக்கக்கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர்களின் அதிகாரிகளுக்கு அமைச்சரவை அமைச்சிலேயே கட்டட வசதிகள் வழங்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு அதிகபட்சமாக 11 ஊழியர்களை மாத்திரமே நியமிக்க முடியும்.
அத்துடன், இராஜாங்க அமைச்சர்களின் பணிக்கு அதிகபட்சமாக 3 உத்தியோகபூர்வ வாகனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர்களின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மாதாந்தம் 500 லீட்டர் எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஓர் இராஜாங்க அமைச்சருக்கு ஒரு ஆடம்பர வாகனமும் அதற்கு 500 லீட்டர் பெற்றோலும் அரசாங்கம் இலவசமாக வழங்குவதன் நோக்கம் என்ன? 500 லீட்டர் என்றால் இரண்டரை பீப்பாக்கள். அவ்வளவு பெற்றோலையும் பாவித்து ஆடம்பர வாகனத்தில் அவ்வளவு பெற்றோலையும் பாவித்து பயணம் செய்து மக்களுக்கான சேவைக்கு அர்ப்பணிப்பதானால் குறைந்தது 12500 கிலோ மீற்றர்கள் பயணம் செய்யலாம். அதாவது இந்தியாவிலிருந்து ஈரானுக்கு பயணம் செய்து திரும்பி வந்தாலும் அவ்வளவு பெற்றோல் தேவைப்படாது. அந்த பெற்றோலைக் கறுப்புச் சந்தையில் விற்று இலட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். பொதுமக்களின் சேவை என்ற பெயரில் பா.உ களுக்கு களவாடவும், கொள்ளையடிக்கவும் தொழிலும், ஏனைய வசதிகளும் வழங்கப்பட்டிருப்பதாகத் தான் ஊகிக்க முடிகின்றது. அவ்வளவு வசதிகளையும் கொடுத்து இன்ன கடமையைும் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு தொழில் பட்டியல் வழங்கப்படவில்லை. அது பற்றிய பேச்சே இல்லை. பொதுமக்களின் பணத்தைச் சூறையாடி கள்வர்களையும் கொள்ளைக்காரர்களையும் வளர்ப்பதற்கு இந்த நாட்டில் பாராளுமன்றம் தேவையா என பொதுமக்கள் கேட்கின்றார்கள்.
ReplyDelete