50 சதவீதமான இலங்கையர்கள் விட்டமின் D குறைபாடுடையவர்கள்
இலங்கையின் சனத்தொகையில் சுமார் 50 சதவீதமானவர்களுக்கு விட்டமின் டி குறைபாடு காணப்படுவதாக களுபோவில போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிரஞ்சலா மிகொட விதான தெரிவித்தார்.
விட்டமின் டி குறைபாடு காரணமாக மக்கள் பல்வேறு நோய்கள் மற்றும் துன்பங்களுக்கு உள்ளாவதாக வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
சூரிய ஒளி மூலம் மக்கள் தங்களுக்குத் தேவையான விட்டமின் டியைப் பெற முடியும் என்றும், இது மிகவும் எளிமையான மற்றும் மலிவான வழி என்றும் குறிப்பிட்டார்.
சராசரியாக நபரொருவர், ஒரு நாளைக்கு அரை மணி நேரம் வீதம் வாரத்தில் மூன்று நாட்கள் சூரிய ஒளியை பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.
Post a Comment