நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி, பொருளாதார குற்றங்களை இழைத்தது இந்த 5 பேர்தான்
நாட்டை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக திட்டமிட்டு பொருளாதார குற்றங்களை இழைத்த குழுவை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பொதுஜன முன்னணியில் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டலஸ் அணியை சேர்ந்த சுயாதீன உறுப்பினர் பேராசிரியர் சரிது ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டு மக்களுக்கு வேண்டுமென்றே குற்றம் செய்ததால்தான் இவ்வளவு கடினமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூட கூறுகிறது. இந்த நெருக்கடியை உருவாக்கியது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். குறித்த அறிக்கையில், ஐவரின் பெயர்கள் தெளிவாக எழுப்பப்பட்டுள்ளன.
டாக்டர் பி.பி. ஜெயசுந்தர,
பேராசிரியர் லக்ஷ்மன்,
எஸ்.ஆர். ஆட்டிகல,
அஜித் நிவாட் கப்ரால்
பசில் ராஜபக்ச,
இந்த பெயர்கள் அனைத்தும் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை விட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை, பொருளாதார நெருக்கடிக்கு இவர்களே காரணம் என தெரிவித்துள்ளார்.
காவியன்
ஆம் இந்த ஐந்து கொள்ளைக்காரர்களுக்கும் எதிராக ஒரு கையொப்பவேட்டை ஆரம்பித்து குறைந்தது ஐம்பது இலட்சம் இலங்கையர்கள் அதில் கையொப்பமிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிரதிகளை உயர் நீதிமன்றத்துக்கும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு, போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கும் அனுப்பி சர்வதேச நாடுகள் தலையிட்டு இலங்கைக்கு ஒரு நியாயம் பெற்றுத் தருமாறு இலங்கை மக்கள் வலியுறுத்த வேண்டும். ஏனெனில் இந்த அரசாங்கமோ இனி வரும் அரசாங்கங்களோ அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதில் யாருக்கும் ஒரு சிறிதளவேனும் நம்பிக்கை கிடையாது. இந்த விடயத்தை தாமதமின்றி உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
ReplyDelete