ரணிலின் அமைச்சரவையில் இணைந்த 4 பேர் - நடவடிக்கை எடுப்போமென மைத்திரி அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய ராஜாங்க அமைச்சர்கள் இன்று -08- பதவியேற்றுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் பல கட்சிகளை சேர்ந்த 38 பேர் ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் கட்சியின் தீர்மானத்திற்கு மதிபளிக்காமல் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க ஆகிய 4 பேர் இராஜாங்க அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர்.
மேலும், அமைச்சரவை அமைச்சர் பதவிக்காக துமிந்த திஸாநாயக்க காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். .
எல்லாவற்றுக்கும் முன்பு சிரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தை சந்திரிகாவிடம் இருந்து பலாத்காரமாகப் பறித்து அதன் உரிமைகளையும் சலுகைகளையும் பலாத்காரமாக அனுபவிக்கும் இந்த மைதிரி கிராம சேவக,ஏனையவர்களுக்கு ஒழுக்கமும் சட்டமும் கற்பிக்க முன்பு முதலில் தன்னைத் தானே திருத்திக் கொள்ள வேண்டும். ஒரு கட்சியை வளர்ப்பதற்குரிய முக்கிய நிபந்தனை தான் முதலில் நேர்மையாக நடந்து கொண்டால் மாத்திரம் அங்கத்தவர்களைத் திருத்தலாம். இலங்கையில் அனைத்துக் கட்சிகளும் ஊழல்,களவு, பொய், அனைத்து ஒழுக்கம் கெட்ட நடத்தையுடையவர்கள் தான் தலைமை வகிக்கின்றார்கள். இத்தகையவர்களால் இந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் ஏன் அவர்களுடைய கட்சிக்கும் அழிவும் எஞ்சியிருப்பது இழிவும் மாத்திரம். இந்த நாட்டுக்கு முன்னேற்றத்தை இலக்கு வைப்பவர்கள் முதலில் தான் நேர்மையானவர்களாக நடந்து காட்ட வேண்டும். அது எங்கும் துரதிருஷ்டவசமாக நடைபெறுவதைக் காணவில்லை. நம்மைச்சூழவும் எத்தனையோ உலகத் தலைவர்கள் நேர்மையாக இன்றும் முன்மாதிரியாக வாழ்கின்றனர். ஆனால் நாம் அவற்றைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
ReplyDelete