இலங்கை கிரிக்கெட்டிடம் 40 மில்லியன் டொலர்கள் கையிருப்பு உள்ளது - இது நியூசிலாந்து கிரிக்கெட்டின் பணத்தை விட அதிகமாகும்
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் தற்போது சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பு இருப்பதாகவும், அந்த கையிருப்பு நியூசிலாந்து கிரிக்கெட்டின் பணத்தை விட அதிகமாகும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா கூறுகிறார்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்டிருந்தால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், போட்டி நடைபெறும் காலப்பகுதியில் இலங்கையில் நிலவிய மோசமான சூழ்நிலை காரணமாக இந்த தொகை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஷம்மி சில்வா, இந்த பணக் குவியல் தொடர்பில் அனைவரும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தையே நோக்குகின்றனர்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் மேலும் கூறுகையில், ஆசிய கிண்ணத்தை இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு கொண்டு சென்றதன் மூலம் கிரிக்கட் நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைத்தது.
இந்த போட்டியின் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கோ அல்லது இலங்கைக்கோ நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக யார் கூறினாலும் அவர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment