Header Ads



பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஆரம்பம் - 23ம் திகதி வரையில் விண்ணப்பிக்க முடியும்


2021 – 2022ஆம் கல்வி ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்குரிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று -05-  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் 23ம் திகதி வரையில் இதற்காக விண்ணப்பிக்க முடியும். 2021-2022 கல்வியாண்டிற்காக 42 ஆயிரத்து 519 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர்.


பல்கலைக்கழக பிரவேசத்திற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மாணவர் கைநூல் தற்போது நூல் விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.


தெரிவு செய்யப்பட்ட விற்பனை முகவர்களின் பெயர், பட்டியல் மும்மொழிகளிலும் நேற்றைய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இதற்காக பல்கலைக்கழக இணையத்தளத்தைப் பயன்படுத்த முடியும்.


ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் 1919 அரசாங்க தகவல் கேந்திரத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் இந்த அதிகாரிகளுக்கு இது தொடர்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. பல்கலைக்கழக அனுமதிக்காக கண்டி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிப்பதற்கு உதவிகள் அவசியமானால் பின்வரும் மின்அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டால் எங்கள் சேவையை உங்களுக்குப் பெற்றுக் கொள்ளலாம். arabtourisms@gmail.com

    ReplyDelete
  2. මේ වසරේ මහනුවර දිස්ත්‍රික්කයේ විශ්වවිද්‍යාල ප්‍රවේශය සඳහා අයදුම් කරන අයදුම්කරුවන්ට අන්තර්ජාල පහසුකම් සහ උපදේශන සේවාව ඉල්ලුම්පත් අන්තර්ජාලය හරහා ඉදිරිපත් කිරීම ද කඩිනමින් ලබාගැනීම සඳහා විද්‍යුත් තැපෑලෙන් අප හා සම්බන්ධ විය හැක. අයදුම් කිරීම සඳහා අවසාන දිනය 2022 සැප්තැම්බර් 23 දින බව කරුණාවෙන් සලකන්න

    ReplyDelete

Powered by Blogger.