அல்குர்ஆன் பயிற்சி நெறிக்கு சர்வதேசத்திலிருது 16 காரிகள் தெரிவு, இலங்கையிலிருந்து மட்டும் 5 காரிகள் தெரிவு.
சவூதி அரேபிய மதீனா நகரில், "அல்குர்ஆனை அழகிய முறையில் ஓதி மற்றவர்களுக்கும் அதனை கொண்டு செல்லும் இலகுமுறை பயிற்ச்சிக்காகவே இவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இணையமூடாக சர்வதேசமெங்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, Online மூலம் அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேரடியாக ஓத வைத்து ,அதிலிருந்து அழகிய முறையில் ஓதிய காரிகளிலிருந்தே 16 பேர் இப் பயிற்சி நெறிக்கு தெரிவாகி நேற்றைய தினம் (11/09) மதீனா நகரை சென்றடைந்திருக்கிறார்கள்.
மதீனாவின் அதி சிறந்த காரிகளினூடாக ,மஸ்ஜிதுன் நபவி இமாம்களின் மேற்பார்வையில் இவர்களுக்கான பயிற்சிகள் நடைபெறவிருக்கிறது.
இவர்களுக்கான பயிற்சி நெறிகள் இன்றிலிருந்து ஒரு மாத காலம் நடைபெற்று இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 11/10/2022 யில் நாடு திரும்புவார்கள்.
இப் பயிற்சி நெறிக்காக எமது தாய் நாட்டிலிருந்து (இலங்கை)ஐந்து காரிகள் தெரிவாகியிருப்பது நமது நாட்டுக்கும் சமூகத்திற்கும் கிடைத்த நற்பேறேயாகும்.
இலங்கையிலிருந்து
தெரிவான காரிகள் ,
(1) அல் ஹாபிழ் இப்ராஸ்,ஏறாவூர்.
(2) அல்ஹாபிழ் றிFராஸ், கொழும்பு
(3) அல்ஹாபிழ் அப்துல்லாஹ் (அடுலுகம)
(4) அல்ஹாபிழ் பிர்னாஸ் (கொழும்பு)
(5) அல்ஹாபிழ் முகர்ரம் (தெல்தோட்ட)
தகவல்:ஏறாவூர் நஸீர்.
Masha Allah
ReplyDelete