Header Ads



நீர்கொழும்பில் 14 பேரை சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்


- Ismathul Rahuman -

     நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவலைப்பு நடவடிக்கைகளில் ஐஸ், ஹெரோய்ன் போதைப் பொருட்களை தம்வசம் வைத்திருந்த 14 பேர்களை கைது செய்துள்ளனர்.

      நீர்கொழும்பு பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினர் அண்மைக் காலத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

     1240 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 8 பேர்களும், 6530 மில்லிகிராம் ஹேரோய்னுடன் 6 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

    சந்தேக நபர்கள்  நீர்கொழும்பின் போலவலான, பெரியமுல்லை, லுவிஸ் பிலேஸ், கிரீன்ஸ் வீதி, தலாதூவ, சாந்த ஜோஸப் வீதி, போரத்தொட்ட, அபேசிங்கபுர, செல்லகந்த, அடி ஹெட்ட பார ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். 

    சந்தே கநபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

   நீர்கொழும்பு பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி  உப பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார தலைமையில் பொலிஸ் கான்ஸ்டபல்களான துஷார(38339), பிரனாந்து(77769), ரணசிங்க(56302), சில்வா(99109), விஜயரத்ன(54330), வெதகே(12703) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரே சந்தேக நபர்களை கைது செய்தனர்.

No comments

Powered by Blogger.