அதாவுல்லா உள்ளிட்ட 13 பேர், புதிதாக அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்
-சி.எல்.சிசில்-
புதிதாக பன்னிரண்டு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 12 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்பட உள்ளனர்.
நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, ஜனக பண்டார தென்னக்கோன், எஸ்.பி.திஸாநாயக்க, விமலவீர திஸாநாயக்க, சரத் வீரசேகர, எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்மொழிந்துள்ளது.
ஏனைய கட்சிகளில் இருந்து ஜீவன் தொண்டமான் மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.
தற்போது 18 கபினட் அமைச்சர்களே உள்ளனர்.
இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றத்தை நோக்கி முன்னே செல்ல வாய்ப்புக்களே இல்லை என்பதை மேற்படி செய்தி தௌிவாகக் காட்டுகின்றது. கள்வர்களும் மோசமான நடத்தையுடையவர்களும் ஒரு முன்னேற்றகரமான ஒரு விடயத்தை சாதித்ததாக உலக வரலாறு இல்லை.மனிதன் உள்ளேயும் வௌியேயும் இறைவன் பல்வேறு அத்தாட்சிகளை வைத்து அவற்றின் மூலம் மனிதன் பாடம் கற்றுக் கொண்டு இந்த உலகில் முன்னேறிச் செல்ல வேண்டும் என விரும்புகின்றான். ஆனால் மனிதன் அதை எதனையும் பார்க்கவோ அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவோ தயாராக இல்லை. அப்படியானால் நாட்டு மக்களையும் நாட்டையும் அழித்து பிரபாகரன் தனிநாடு அமைத்தது போல இந்த கள்ளக்கூட்டம் சுடுகாட்டை மட்டும்தான் இந்த நாட்டின் எதிர்காலப் பரம்பரைக்கு விட்டுச் செல்வார்கள்.
ReplyDelete