எரிபொருள் நெருக்கடிக்கு QR முறைமை தீர்வாகாது - கைவிரித்தார் அமைச்சர்
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR முறைமை திட்டவட்டமான தீர்வாகாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதித் திறனை கருத்திற் கொண்டு எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதுடன் அதனை சிறந்த முகாமைத்துவத்துடன் வாடிக்கையாளருக்கு விநியோகிக்க குறித்த முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ´ரீபில்ட் ஸ்ரீலங்கா, சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஊடாக எரிபொருளைப் பெறுவதற்கு ஒதுக்கப்படும் பணத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோக வரம்பு தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment